’கோவில் அடிமையை நிறுத்து’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஈஷா யோகா மையத் தலைவர் ஜக்கி வாசுதேவ், புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன் தொடக்கமாக திரை நடிகர் சந்தானம், ஜக்கி வாசுதேவுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பேசிய ஜக்கி வாசுதேவ், ”கோவில் என்பது நமது ஆன்மா. அதனை அரசின் அடிமையாக வைத்திருப்பது வருத்தமாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள 12 ஆயிரம் கோவில்களில் ஒரு கால பூஜை கூட நடக்கவில்லை என அரசு தெரிவித்துள்ளது. இந்துக்களின் கோவில்களை பராமரிக்க அவர்களில் நேர்மையான திறமையானவர்கள் இல்லையா? அவர்களை கொண்டு குழுவினை அமைத்து கோவிலை நிர்வகிக்க வேண்டும். அரசாங்கம் செய்வதற்கு எவ்வளவோ வேலைகள் இருக்கின்றன. கோவிலை நடத்துவதுதான் அரசின் வேலையா?