அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, " வரும் தேர்தலில் திமுக கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெரும். அதற்கு வாழ்த்து சொல்வதற்காகவும், மரியாதை நிமித்தமாகவும் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தேன். தொகுதிப்பங்கீடு குறித்து பேசவில்லை.
அனைத்து தொகுதிகளிலும் நேரில் பரப்புரை செய்ய திட்டமிட்டுள்ளேன். முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆதாரத்துடன் ஆளுநரிடம் திமுக புகாரளித்துள்ள நிலையில், நடவடிக்கை இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவோம்.