அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுகவுடன் மறைமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் தேர்தலை தனித்தே சந்திக்க தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தேமுதிக இதுவரை வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி். தினகரன், தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது உண்மைதான் என்றார். மேலும், கூட்டணி பற்றி இரண்டொரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.