இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அதன் தாக்கம் அதிகமுள்ள சுமார் 60 நகரங்களில் இருந்து 24,000 நபர்களின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் சென்னை, திருவண்ணாமலை, கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் இருந்து சளி மாதிரிகள் மக்கள் தொகையின் அடிப்படையில் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
கரோனா சமூகப் பரவலாக மாறியுள்ளதா? - ஆராய்ச்சியை தொடங்கிய ஐசிஎம்ஆர் - கரோனா
சென்னை: இந்தியாவில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியுள்ளதா என்பது குறித்த பரிசோதனை சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் நடைபெற்று வருகிறது.
spread
தற்போது இந்த மாதிரிகளைக் கொண்டு சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இப்பரிசோதனை பணிகள் விரைவில் முடிவடைந்து, அதன் முடிவுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை