தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பிரதமரின் பரிசா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு? - பெட்ரோல், டீசல் விலையுயர்வு

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பிரதமர் வந்து சென்ற அடுத்த நாளே, இரவோடு இரவாக விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

price hike
price hike

By

Published : Feb 15, 2021, 8:05 PM IST

நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ள விலை உயர்வால், சென்னையில் மானியம் அல்லாத 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை, இன்று முதல் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டு, 785 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இம்மாதத்தில் மட்டும் கேஸ் சிலிண்டர் விலை இரண்டு முறை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்தாண்டு நவம்பரில் 610 ரூபாயாக இருந்த மானியமல்லாத எரிவாயு சிலிணடரின் விலை, ஜனவரியில் 710 ரூபாயானது. பின்னர் கடந்த நான்காம் தேதி 25 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், இன்று இன்னும் 50 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

10 நாட்களில் 75 ரூபாய் சிலிண்டர் விலையேற்றம்:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப உள்நாட்டு சந்தையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வந்தாலும், முன்பு ஒரு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை இருந்தது. தற்போது 24.94 ரூபாய் மட்டுமே எரிவாயு மானியமாக வழங்கப்படுகிறது. மானியமும் குறைக்கப்பட்டு சிலிண்டர் விலையும் தொடர்ந்து ஏறி வருவதால் கடும் சுமை ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பிரதமரின் பரிசா விலையேற்றம்?

இது பற்றி நம்மிடம் பேசிய இல்லத்தரசி ஜானகி, "சிலிண்டர் விலை உயர்வால் குழந்தைகளுக்கு பிடித்தவற்றைக்கூட சமைத்து கொடுக்க முடியவில்லை. பிரதமர் வந்து சென்ற பிறகு சமையல் எரிவாயு விலை இரவோடு இரவாக ஏற்றப்பட்டுள்ளது. இதுதான் பிரதமர் தமிழக மக்களுக்கு வழங்கும் பரிசா" எனக் கேள்வி எழுப்பினார். "ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சிரமத்திற்கு ஆளாகியுள்ள நேரத்தில், சிலிண்டர் விலையும் ஏற்றப்பட்டுள்ளதால், குடும்பத்தை எப்படி நடத்துவது என்பதே தெரியவில்லை. படிப்படியாக மானியத்தையும் குறைத்துவிட்டனர்" என்கிறார் தனியார் நிறுவன ஊழியர் ராஜா.

பிரதமரின் பரிசா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு?

சதமடிக்க காத்திருக்கும் பெட்ரோல் விலை:

அதேபோல், இன்றைய நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல், 91 ரூபாய் 19 காசுகளுக்கு விற்பனையாகிறது. டீசல் 84.44 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு, உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பெட்ரோல், டீசல் மீது வரி விதிக்கப்படுவதே காரணம் என்கிறார் பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம். "2014ல் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்க அரசு அனுமதி வழங்கியது. பெட்ரோலியப் பொருட்களின் விலையில் அரசு தலையிடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலராக இருந்தது.

சதமடிக்க காத்திருக்கும் பெட்ரோல் விலை:

கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை அதிகரிப்பு:

தற்போது கச்சா எண்ணெய் 60 டாலராக மட்டுமே உள்ளது. ஆனால், பெட்ரோல் விலை 90 ரூபாயைத் தாண்டியுள்ளது. பெட்ரோல் விலையில் 260% வரியை மத்திய, மாநில அரசுகள் விதிக்கின்றன. தலையீடு இருக்காது என்று கூறிவிட்டு, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் சுங்க வரியை உயர்த்திக்கொண்டே சென்றார்கள். இதன் உச்சக்கட்டம்தான் தற்போது நடப்பது. கடந்த பட்ஜெட்டில் சிறப்பு சுங்க வரியை உயர்த்த சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டுள்ளது.

பெரு நிறுவனங்களுக்கு சலுகை; மக்களுக்கு விலையுயர்வு:

பெரு நிறுவனங்களுக்கு சலுகை; மக்களுக்கு விலையுயர்வு:

மத்திய அரசு நேரடி வரியை குறைத்து, சொத்துவரியை ரத்து செய்து, பெரு நிறுவனங்களுக்கான வரியை 32%லிருந்து 25%ஆகக் குறைத்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வரியை முற்றிலுமாக தள்ளுபடி செய்து என, பெரு நிறுவனங்களுக்கு சலுகைகளை வழங்கிவிட்டு, சாமானிய மக்களின் மீது சுமையை ஏற்றியுள்ளனர். ஜிஎஸ்டி வரி வரம்பின் கீழ் பெட்ரோல், டீசல் விலையைக் கொண்டு வந்தால் 5-7 ரூபாய் வரை தான் வரி விதிக்க முடியும். தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 35-40 ரூபாய் வரை விதிக்கப்படுகிறது" என்றார்.

இதையும் படிங்க: வாரணாசியில் இரண்டு கிராமங்களைத் தத்தெடுக்கும் பிரதமர் மோடி!

ABOUT THE AUTHOR

...view details