சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் வேகம் அதிகமாக இருந்து வருவதால், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு! - 12th exam
17:07 April 18
தமிழ்நாட்டின் கரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கட்டுப்பாடுகளை அதிகரிப்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு அரசின் ஆலோசகர் சண்முகம், மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, சி.பி.எஸ்.இ பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் தமிழ்நாட்டில் மே 5ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு நடைபெறவுள்ளது.
கரோனா இரண்டாம் அலை அதிகரித்து வருவதாலும், மத்திய அரசே தேர்வுகளை ஒத்தி வைத்து வருவதால், தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புத் தேர்வை ஒத்திவைக்கப்பட்டது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஏற்கனவே செய்முறைத் தேர்வுகள் முடிந்த பின்னர் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், மாணவர்கள் பொதுத் தேர்விற்குப் படிப்பதற்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி முதல்கட்டத்தில் செய்முறைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படவுள்ளது.