சென்னை : இருளர் இன மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை அரசாணையாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. வனத்துறை அனுமதி மறுத்த நிலையில், இருளர் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இது வழங்கப்பட்டுள்ளது.
இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி- தமிழ்நாடு அரசு அரசாணை
இருளர் இன மக்கள் பாம்பு பிடிக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இருளர் இன மக்கள் கோரிக்கையை ஏற்று பாம்பு பிடிப்பதற்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியதோடு அதிகாரப்பூர்வமாக அரசாணையையும் பிறப்பித்துள்ளது. இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தினருக்கு பாம்புகடி, விஷமுறிவு மருந்துக்கான பாம்புகளை பிடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வனத்துறை அனுமதி வழங்காத காரணத்தினால் உலகளவில் பாம்பு பிடிப்பதில் பெயர் பெற்ற நூற்றுக்கணக்கான இருளர் இன மக்களின் வாழ்வாதாரமும் முடங்கி போயிருந்தது. விஷமுறிவு மருந்து தயாரிக்க நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை பாம்பு ஆகிய இனங்கள் பயன்படுகின்றன.
இதையும் படிங்க : பறவை கூண்டில் புகுந்த 6 அடி கோதுமை நாகம்; பறவைகளை விழுங்கியது