தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஒய்வு பெறும் நிலையில் ஜாஃபர் சேட்டுக்கு புதிய பொறுப்பு! - ஜாஃபர் சேட்

சென்னை: அடுத்த மாதம் ஒய்வு பெற உள்ள நிலையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ஜாஃபர் சேட்டுக்கு புதிய பொறுப்பு வழங்கி உள்துறை கூடுதல் செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

transferred
transferred

By

Published : Nov 3, 2020, 4:16 PM IST

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” தமிழக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத் துறை டிஜிபியாக பணியாற்றி வந்த ஜாஃபர் சேட், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை டிஜிபியாக பணியமர்த்தப்பட்டுள்ளார். ரயில்வே பாதுகாப்புப் படை டிஜிபியாக இருக்கும் சைலேந்திர பாபு, கூடுதலாக குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை டிஜிபி பொறுப்பையும் கவனிப்பார்.

மத்திய அரசு பணியில் சென்றிருந்த டிஐஜி துரைகுமார், டிஜிபி அலுவலக நிர்வாகப்பிரிவு டிஐஜியாக பணியமர்த்தப் பட்டுள்ளார் “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் ஒய்வு பெற உள்ள நிலையில், ஐபிஎஸ் அதிகாரி ஜாஃபர் சேட்டுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இம்மாத இறுதியில், பெரியளவிலான ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் டெண்டர் அறிவிப்பு: ரத்து செய்ய காங்கிரஸ் எம்.பி கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details