vehicle accident: சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையராக இருந்துவருபவர் கார்த்திகேயன் ஐபிஎஸ். நேற்று (ஜனவரி 9) முழு ஊரடங்கு என்பதால் இரவு 7 மணியவில் தனது பி.எஸ்.ஓ. விஜயகுமாருடன், கார்த்திகேயன் காரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவந்தார்.
வாகனத்தை ஆயுதப்படை காவலரான மனோஜ் (25) ஓட்டிவந்தார். இந்நிலையில் காரானது கீழ்பாக்கம் சில்வன் லாட்ஜ் காலனி பகுதியிலிருந்து ரங்கநாதன் தெருவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
அப்போது கெல்லீஸ் சிக்னலில் இருந்து ரங்கநாதன் தெரு நோக்கிவந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக துணை ஆணையரின் வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுச் சென்றார்.