சென்னை: செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வருபவர், ஐபிஎஸ் அலுவலர் அரவிந்தன். இவர் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக தமிழ்நாடு அரசின் அண்ணா விருது பெற்றவர் ஆவார்.
இந்நிலையில் இவர் தனது சமூக வலைதளத்தில் அவரது சகோதரர் அபிநந்தனுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அபிநந்தனும் டெல்லி காவல் துறையில் உதவி ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார்.