2013 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விக்ரம் அகர்வால், கவுதம் சந்த் நிமானி, மகாவீர் சந்த், பாப்பு, உத்தம் சி.ஜெயின் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் மருமகனும் சிஎஸ்கே அணியின் உரிமையாளருமான குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த வழக்கு விசாரணையில் குருநாத் மெய்யப்பன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும், சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது.
ஐபிஎல் சூதாட்ட வழக்கு: மறுவிசாரணை தொடங்கிய சிபிசிஐடி
சென்னை: ஐபிஎல் சூதாட்ட வழக்கு விசாரணையை இன்று முதல் சிபிசிஐடி மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் சூதாட்டம் தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி இன்று முதல் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. 23 நபர்கள் குற்றவாளிகளாக பட்டியலிடப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பாக, ஹோட்டல் ரேடிசன் ப்ளூ உரிமையாளர் விக்ரம் அகர்வால் நான்கு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐபிஎல் சூதாட்ட லஞ்ச புகார்: சம்பத்குமார் ஐபிஎஸ் உள்பட நால்வர் விடுதலை!