சென்னையில் ரயில்களில் மதுபானங்கள், போதைப் பொருட்கள், கணக்கில் வராத அவாலா பணம் தொடர்ந்து கடத்தப்படுவதாக ரயில்வே காவல் துறையினருக்குத் தொடர்ந்து தகவல்கள் வந்துள்ளன.
இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆர்பிஎப் காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில் காவல் துறையினர் ரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டு சந்தேகத்திற்கு இடமான பார்சல்களை சோதனை செய்தனர்.
தாம்பரம் ரயில் நிலைய ஐந்தாவது நடைமேடைக்கு வந்த சோழன் விரைவு ரயிலில் வந்த பயணிகளின் உடைமைகளை ஆர்.பி.எப் காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது ரயிலிலிருந்த திண்டிவனத்தைச் சேர்ந்த பயணி பச்சைமுத்து(41) என்ற பயணி வைத்திருந்த மூட்டைகளில் கட்டுக்கட்டாக சுமார் 15.50 லட்சம் ரூபாய் இருந்தது தெரியவந்தது.
லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் மேலும் அவர் மூட்டையில் வைத்து கொண்டுவந்த பணத்திற்கு எந்த ஆவணமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருமான வரித்துறை அலுவலர்களிடம் ரயில்வே காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க:வீட்டு வாடகை கொடுக்க முடியாததால் வாடகை இருந்த வீட்டிலேயே தற்கொலை செய்த நபர்