தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சூரப்பா விவகாரம்: 'ஒரு நபர் நீதிபதி ஆணையத்துக்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும்' - Anna University Vice Chancellor

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் நீதிபதி ஆணையத்துக்கான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

By

Published : Nov 13, 2020, 7:45 PM IST

நூறு கோடி ரூபாய்க்கு மேல் தேர்வு கட்டணம் வசூலித்து விட்டு வெறும் இரண்டு கோடி ரூபாய்க்கு டெண்டர் வெளியிட்டது, 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என்று அறிவித்து விட்டு அவற்றின் பெயர்களை இதுவரை வெளியிடாதது, இறுதி ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு நடத்திய பிறகு அந்த ஆண்டு தேர்வு நடத்தவில்லை என்று மத்திய அரசுக்கு தவறான தகவல் கொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது வைக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி சார்பில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த ஒரு நபர் ஆணையத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று (நவம்பர் 13) வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகள் ஆதரமற்றவை. முறைகேடுகளுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை சூரப்பா எடுத்துள்ளார். அவர் மீது ஊழல் புகார் என்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே, விசாரணைக் குழு அமைப்பதற்கான ஒரு நபர் ஆணையத்தின் அரசாணையை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details