அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், வாஷிங்டன் நகரில், அமெரிக்க சிறு, குறு தொழில்கள் கவுன்சிலின் நிர்வாகிகளை நேரில் சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகளைப் பெறுவது குறித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பேசிய பன்னீர்செல்வம், ' இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு 2018ஆம் ஆண்டில் புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கை, ஸ்டார்ட் அப் இன்னோவேஷன் கொள்கை, உணவுப் பதப்படுத்தும் கொள்கை, எரிசக்தி கொள்கையை வெளியிட்டுள்ளது' எனத் தெரிவித்தார்.