சென்னை:பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 20 முதல் ஜூலை 27 ஆம் தேதி வரை பெறப்பட்டன. பொறியியல் படிப்பில் சேருவதற்கு 2 லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து இருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 79 மாணவர்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தி உள்ளனர்.
இவர்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள 12 இடங்கள் மற்றும் சுயநிதி பல்கலைக்கழகங்களில் உள்ள 488 இடங்கள் உட்பட 500 இடங்களில் விளையாட்டு வீரர்கள் சேருவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆக.1 (இன்று) முதல் 8ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது. விளையாட்டு பிரிவில் சேர்வதற்கு சிபிஎஸ்இ மாணவர்கள் உட்பட 3093 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை குழு செயலாளர் புருஷோத்தமன் கூறியதாவது, ’பொறியியல் படிப்பில் சேருவதற்கு 2லட்சத்து 11 ஆயிரத்து 95 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவு செய்து இருந்தனர். இவர்களில் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 79 மாணவர்கள் விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியுள்ளனர். விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று ஆக.1 முதல் வரும் 8ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து பொறியில் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.