தமிழ்நாடு

tamil nadu

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்: கே.எஸ். அழகிரி

By

Published : Mar 2, 2021, 6:22 PM IST

சென்னை: திமுகவுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும், தமிழ்நாட்டில் நிச்சயமாக காமராஜர் ஆட்சியை அமைப்போம் என சென்னை விமான நிலையத்தில் இன்று (மார்ச் 2) தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கே.எஸ். அழகிரி
சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கே.எஸ். அழகிரி

சென்னை விமான நிலையத்தில் கே.எஸ். அழகிரி இன்று (மார்ச். 2) செய்தியாளர்களிடம் பேசுகையில், “திமுகவுடன் தொகுதி பங்கீடு பற்றி பேச செல்கிறோம். திமுகவுடன் பேசிய பிறகு பேச்சுவார்த்தை குறித்த தகவலை தெரிவிக்கிறோம். எத்தனை தொகுதிகள் என்பதை தோழமை கட்சிகள் பேசிக்கொள்ள வேண்டியது என சொல்லிவிட்டு பேச்சுவார்த்தைக்கு செல்ல முடியாது.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கே.எஸ். அழகிரி

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை அச்சாகிக் கொண்டு இருக்கிறது. இந்த வாரத்தில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். விருப்ப மனு வாங்கிக் கொண்டிருக்கிறோம். மார்ச் 6, 7 ஆகிய தேதியில் நேர்காணல் நடக்கும்.

காங்கிரஸ் கட்சி எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின்போது அது பற்றி பேசப்படும். தொகுதி பங்கீடு சுமூகமாக முடிவடையும். நான் பொய் பேச மாட்டேன். தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று யாரும் சொல்லவில்லை. அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நிச்சயமாக தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்.

2021ஆம் ஆண்டு நடக்கும் மதசார்பற்ற கூட்டணி, திமுக தலைவர் ஸ்டாலினை முதலமைச்சராக்குவது என்று காங்கிரஸ் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதற்கும் அதற்கும் சம்பந்தமில்லை" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details