இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஓர் பிரிவான சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாந்தி. கும்பகோணத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், தற்போது பல்வேறு பதவிகள் வகிக்கும் புகழ்பெற்ற பெண் ஆளுமைகளில் ஒருவராவார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நம் ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு அவர் சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "என் குடும்பத்தில் நான் தான் முதல் மருத்துவர். நான் மருத்துவம் படிக்க, குடும்பத்தாரின் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி முடிவெடுத்தேன். மத்திய அரசில் மருத்துவராக பணியில் சேர்ந்த போதும், நான் தொடர்ந்து படித்துக் கொண்டு தான் இருந்தேன். பின்னர் அரசு வேலையை உதறிவிட்டு, சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தேன். இதில் நான் சம்பாதிக்கவில்லை என்றாலும், எனக்கு பிடித்த பணியை சமூகத்திற்கு ஆற்றுவதில் மன நிம்மதி அடைந்தேன். என்னுடையை ஒவ்வொரு விருப்பு வெறுப்பும் என்னை சார்ந்தாக தான் இருந்தது" என்று தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.