யோகா என்பது மிக நுண்ணிய அறிவியலை அடிப்படையாகக் கொண்ட ஆன்மிக ஒழுக்கம். இது மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்வையும் நல்லிணக்கத்தையும் அளிக்கிறது. சுருக்கமாகக் கூறவேண்டுமெனில், யோகா என்பது ஆரோக்கியமான வாழ்வுக்கு உதவும் கலை மற்றும் அறிவியல்.
மனதுக்கு நிரந்தர அமைதியை அளித்து, நாம் யாரென்பதை உணந்துகொள்ளும் வகையில் உடலும் மனமும் ஆன்மிகத்துடன் இணைந்து பயிற்சி செய்யும் இந்தக் கலை, பண்டைய இந்தியாவில் தோன்றியது. ’யோகா’ என்ற சொல் சமஸ்கிருதத்தில் உள்ள ‘யுஜ்’ என்ற சொல்லில் இருந்து பிறந்தது, ‘இணைவதற்கு’ அல்லது ‘கலப்பதற்கு’ அல்லது ’ஒன்றிணைவதற்கு’ என்பது தான் இந்த சொல்லின் பொருள்.
தன்னை உணர்ந்து கொள்ளுதல், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுபட்டு ‘விடுதலை உணர்வை அடைதல் (மோக்ஷா) அல்லது ‘சுதந்திரம்’ (கைவல்யா) தான் யோகாவின் குறிக்கோள். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் சுதந்திர உணர்வு, ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவை யோக பயிற்சியின் முக்கிய நோக்கம்.
"யோகாவின்” மூலம் அகத்தில் பல்வேறு வகைகளில் பொதிந்துள்ள அறிவியலை உணர்வதோடு, அதில் நிபுணத்துவம் பெற்று விதியை வெல்லலாம். சுவாமி விவேகானந்தர் மேற்கத்திய நாடுகளில் நமது புகழ் பரப்பியதில் வெற்றிகண்டதைத் தொடர்ந்து, 19ஆம் நூற்றாண்டு இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்தியாவில் இருந்து மேற்கத்திய நாடுகளுக்குச் சென்ற குருக்கள், யோகப் பயிற்சியை அங்கு அறிமுகம் செய்தனர்.
1980களில் மேற்கத்திய உலகில் யோகப் பயிற்சியானது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சியாக புகழ்பெறத் தொடங்கியது. இந்த வகை யோகாவை ஹதா யோகா என்றழைத்தனர்.
யோகா சாதனாவின் அடிப்படைகள்:
யோகா ஒரே நேரத்தில் ஒருவரின் உடல், மனம், உணர்வு மற்றும் ஆற்றலின் மீது செயல்படுகிறது. இது நான்கு நிலைகளாக வகுக்கப்படுகிறது: கர்ம யோகா, இது உடலின் மீது செயல்படுகிறது; பக்தி யோகா, நமது உணர்வுகளின் மீது செயல்படுகிறது; ஞான யோகா, நமது மனம் மற்றும் அறிவின் மீது செயல்படுகிறது; க்ரியா யோகா, நமது ஆற்றலின் மீது செயல்படுகிறது.
சூரிய நமஸ்காரம்:
சூரியனுக்கு வணக்கம் செலுத்துதல். மன அழுத்தத்தை குறைத்து மனதுக்கு அமைதியையும் ஒருமுகப்படுத்தலையும் அதிகரிக்கும்.
தியானா(தியானம்):
எண்ண ஓட்டங்கள் ஏதுமின்றி மனதை ஒருநிலைப்படுத்தும் நிலை. ஆழமான அமைதியை அளிப்பதோடு, பதட்டத்தைக் குறைத்து, தசை இறுக்கத்தை தளர்த்தி, தலைவலியை போக்குகிறது.
ப்ரணாயாமா: