தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பட்டியலின பெண் பதவியேற்க இடைக்கால தடை! - பெரியங்குப்பம்

திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி ஊராட்சியில் அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியலின பெண் தலைவர் பதவியேற்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டியலின பெண் பதவியேற்க இடைகால தடை
பட்டியலின பெண் பதவியேற்க இடைகால தடை

By

Published : Oct 10, 2021, 10:05 AM IST

சென்னை: திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒத்துக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதியின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமாரும், முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அவர்கள் தங்கள் மனுவில், "மலைக் கிராமமான நாயக்கனேரியில் 9 வார்டுகளும், 3440 வாக்காளர்களும் உள்ளதாகவும், கிராமத்தின் மக்கள் தொகையில் 66 விழுக்காடு பழங்குடியினரும், மீதமுள்ள 34 விழுக்காட்டில் பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்

பட்டியலினத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் கூட தங்கள் கிராமத்தில் இல்லாத நிலையில், தற்போதைய ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாயக்கநேரி ஊராட்சி தலைவர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட பஞ்சாயத்தில் பட்டியலினத்தவரோ? பழங்குடியினரோ? பெண்களோ? ஒட்டுமொத்த மக்கள் தொகையில் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அதிகமாக இருந்தால் தான் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென்ற விதி உள்ள நிலையில், அது பின்பற்றப்படவில்லை எனவும், இது தொடர்பாக அக்டோபர் 8ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாயக்கனேரி ஊராட்சியில் பட்டியலினத்தவரே இல்லாத நிலையில், கடைசி நேரத்தில் பெரியங்குப்பம் பஞ்சாயத்து வாக்காளரான இந்துமதியின் நாயக்கனேரி பஞ்சாயத்தில் இணைத்ததாக குற்றஞ்சாட்டி தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரியிருந்தனர்.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த நிலையில், மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வேட்புமனு தாக்கல் செய்த இரு பட்டியலின பெண்களில், இந்துமதியின் வேட்பு மனு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவர் அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதனைப் பதிவுச் செய்து கொண்ட நீதிபதிகள், மறு உத்தரவு வரும் வரை நாயக்கனேரி ஊராட்சியில் அன்னபோஸ்ட்டாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டியலின பெண் தலைவர் பதவியேற்க தடை விதித்ததோடு, தேர்தல் ஆணையத்தை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

சம்மந்தப்பட்ட வேட்பாளரை வழக்கில் எதிர்மனுதாரராக இணைக்கவும் மனுதாரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:யூனியன் வங்கியை கண்டித்த சு. வெங்கடேசன் எம்பி!

ABOUT THE AUTHOR

...view details