தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

துப்பாக்கியைக் காட்டி மனைவியை மிரட்டியவருக்கு விதித்த தண்டனை நிறுத்திவைப்பு! - Interim stay for ex Mla three year sentence

சென்னை: துப்பாக்கியைக் காட்டி மனைவிக்குக் கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Interim stay for ex Mla three year sentence  சென்னை உயர்நீதி மன்ற செய்திகள்
Interim stay for ex Mla three year sentence

By

Published : Dec 21, 2019, 9:34 AM IST

சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஏ. அசோகன். இவரது இரண்டாவது மனைவி ஹேமா. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஆனால் அசோகன் தனது முதல் மனைவி சிந்துஜா உடன் வசித்துவருகிறார்.

இச்சூழலில் 2015ஆம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி தனது கணவரின் உதவியாளரை அழைத்துக் கொண்டு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு, பால், பிஸ்கட் வழங்க சென்றுள்ளார் ஹேமா. உதவிப் பொருள்களை வழங்கிவிட்டு வீட்டிற்கு வர, இரவு 11:00 மணி ஆகியுள்ளது. அப்போது, மது போதையில் இருந்த அசோகன் ஹேமா மீது சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு: விசாரணைக்கு ஆஜராகாத அதிமுக முன்னாள் நிர்வாகி!

மேலும், ஹேமாவையும் அவரது தாயாரையும் வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறு, தன் கைத்துப்பாக்கியால் மிரட்டியுள்ளார். இதில் பயந்துபோன ஹேமா, தனது தாயாரை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் இரண்டு முறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டுள்ளது.

குன்னூரில் ஸ்பெஷாலிட்டி தேயிலைத் தூள் கண்காட்சி!

இதனையடுத்து நடந்த சம்பவம் குறித்து பட்டினம்பாக்கம் காவல் துறையில் ஹேமா புகாரளித்துள்ளார். இதனடிப்படையில் அசோகன் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை, விசாரித்த எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், ”நவம்பர் மாதம் 22ஆம் தேதி அசோகனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் காவல் துறை தரப்பில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டுள்ளதால் குற்றவாளிக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிப்பதாக தீர்ப்பளித்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோகன் மேல் முறையீடு செய்தார். அதில் “விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். என்னை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும். மேல் முறையீடு காலம் முடிவடையும் வரை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

சமூக வலைதளங்களில் வைரலாகிவரும் வனக்காப்பாளரின் இளையராஜா பாடல்

இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, சிறப்பு நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு சிறை தண்டனை நிறுத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் மனு தொடர்பாக பட்டினம்பாக்கம் காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 8 வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details