பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு நடைபெற உள்ள மாமல்லபுரத்தில் மட்டும் 7,500 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். குதிரைப் படைகள், 24 மோப்ப நாய்கள் மாமல்லபுரத்தில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 34 ஐஏஎஸ் அலுவலர்கள் அடங்கிய குழுவும் பாதுகாப்பு மேற்பார்வை செய்ய அமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சீனாவிலிருந்து அலுவலர்கள், 150 பேர் தனி விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். சீன பாதுகாப்பு அலுவலர்களும் டெல்லியிலிருந்து வருகை தந்துள்ள மத்திய பாதுகாப்பு குழுவினரும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். மாமல்லபுரத்தில் மட்டும் 800 கண்காணிப்பு படக்கருவிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன.
நெதர்லாந்து அரசர், அரசி இந்தியா வருகை
சென்னையில் ஜி ஜின்பிங் பயணம் செய்யும்போது, அவருக்குப் பாதுகாப்பு வழங்கும் சீனாவின் ஹோங்கி நிறுவனம் தயாரித்த நான்கு லிமோசின் எல் 5 ரக வாகனங்கள், தனி விமானத்தில் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டன. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங் தங்கும் ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர விடுதியில் கண்காணிப்பிற்காக காவல்துறையினர் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, விடுதியின் உள்ளே, வெளியே என மொத்தம் 200 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.