தமிழ்நாட்டில் நாளை (ஏப்.6) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சென்னையிலுள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில், மொத்தம் 5,911 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 2,157 துணை வாக்குச்சாவடிகள் அடங்கும். இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவிற்கு 7,181 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 537 VVPAT இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன.
இயந்திரங்களை எந்தந்த சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, எந்தெந்த இயந்திரங்கள் என கணினி குலுக்கல் முறையில், ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டது. தெரிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சிகளின் அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கப்படும்.