சென்னை:பிப்ரவரி 19 அன்று தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காகப் பல்வேறு நடவடிக்கைகளை மாநில தேர்தல் ஆணையம், அந்தந்த மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பாக சென்னையில் உள்ள 200 வார்டுக்கு மொத்தம் ஐந்தாயிரத்து 794 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அங்குத் தேர்தலுக்குத் தேவையான அனைத்துப் பணிகளும், முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் ஒரு வாக்குச்சாவடி மையத்திற்கு ஒரு சிசிடிவி கேமரா என ஐந்தாயிரத்து 794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பதற்றமான, மிகவும் பதற்றமான ஆயிரத்து 139 வாக்குச்சாவடிகளில் நேரலையில் (web streaming) கண்காணிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.