தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 6, 2020, 12:18 PM IST

ETV Bharat / city

ஹத்ராஸ் நிகழ்வில் அநீதிக்குமேல் அநீதி - பழ.நெடுமாறன் கண்டனம்

நாடெங்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தவறுவது நாட்டின் பன்முகத்தன்மையை அழித்துவிடும் என பழ.நெடுமாறன் எச்சரித்துள்ளார்.

nedumaran
nedumaran

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உத்தரப் பிரதேசத்தில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்ததும், அப்பெண்ணின் உடலை பெற்றோரின் ஒப்புதல் இன்றி இரவோடு இரவாக காவல்துறையினர் எரித்ததும், உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்குறித்த குற்றப் பத்திரிகையில் உ.பி. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த சர்வதேச சதித்திட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறை கூறியிருப்பது, பிரச்சனையை முற்றிலுமாக திசை திருப்பும் முயற்சியாகும். மேலும், இது அநீதிக்கு மேல் அநீதி இழைப்பதாகும்.

இதில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக ஆதிக்க சாதியினரை ஒன்று திரட்டும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டிருப்பதும், சாதி மோதலாக இதை சித்தரிக்க முயல்வதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

நாடெங்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக வன்முறைகள் நாளுக்கு நாள் பெருகி வருவதும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுத்து ஒடுக்குவதற்கு தவறுவதும் நடைமுறையாகிவிட்டது. இந்நிலைமை தொடருமானால், நாட்டின் பன்முகத்தன்மை அழிந்துவிடும்” என எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: “பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு”- கனிமொழி குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details