சென்னை:தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி விக்னேஷ் என்ற இளைஞர் சந்தேகமான முறையில் உயிரிழந்தார். காவல் நிலையத்தில் போலீசார் தாக்கியதால் தான் விக்னேஷ் உயிரிழந்து விட்டதாக அவரது சகோதரர் வினோத் குற்றஞ்சாட்டினார். மேலும் விக்னேஷின் மரணத்தை மறைக்க 1 லட்சம் ரூபாய் போலீசார் கொடுத்ததாக அவர் கூறியதால் சர்ச்சையானது.
இதனையடுத்து விக்னேஷை கைது செய்த உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், காவலர் பவுன்ராஜ், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டார். சிபிசிஐடி இந்த வழக்கின் விசாரணையை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விக்னேஷ் உடலில் ஏற்கனவே காயங்கள் இருந்ததாக போலீசார் கூறப்பட்ட நிலையில், விக்னேஷின் உடலில் 13 காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.