தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலத்தை 23 ஆக உயர்த்த முதற்கட்ட நடவடிக்கை - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலத்தை 23 ஆக உயர்ந்த முதற்கட்ட நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது. 22 சட்டப்பேரவை தொகுதி வாரியாக, மண்டலங்கள் பிரிக்கப்படுகிறது.

Greater Chennai Corporation Zones Increased to 23
Greater Chennai Corporation Zones Increased to 23

By

Published : May 9, 2022, 9:29 AM IST

சென்னை:சென்னை மாநகராட்சி 2011ஆம் ஆண்டு பெருநகரம் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டது. 155 வார்டுகள், 10 மண்டலங்களுடன் செயல்பட்ட மாநகராட்சி 200 வார்டுகளாக உயர்த்தப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இருந்த பேரூராட்சி பகுதிகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இதனால் மாநகராட்சி மண்டலமும் 15 ஆக உயர்ந்தது.

சென்னை மாநகராட்சியை உள்ளடக்கிய பகுதிகளில் 22 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. ஆனால், 16 சட்டசபை தொகுதிகள் மட்டுமே சென்னை மாவட்டத்தில் உள்ளன. மற்ற 6 தொகுதிகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ளன. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் சட்டப்பேரவை தொகுதிக்கு ஏற்ப மண்டலங்கள் அதிகரிக்கப்படும் என பேரவையில் நகராட்சித்துறை அமைச்சர் நேரு அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி 23 மண்டலங்களாக மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி 22 சட்டப்பேரவை தொகுதிகளில் 23 மண்டலங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான வார்டுகள் பிரிக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. புதிய மண்டலங்கள் மற்றும் அவற்றில் இடம் பெறும் வார்டுகள், மக்கள் தொகை பற்றிய உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:

  • முதல் மண்டலம் - 18 வார்டுகள்
  • 2ஆவது மண்டலம் - 15 வார்டுகள்
  • 3ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 4ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 5ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 6ஆவது மண்டலம் - 6 வார்டுகள்
  • 7ஆவது மண்டலம் - 6 வார்டுகள்
  • 8ஆவது மண்டலம் - 6 வார்டுகள்
  • 9ஆவது மண்டலம் - 6 வார்டுகள்
  • 10ஆவது மண்டலம் - 13 வார்டுகள்
  • 11ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 12ஆவது மண்டலம் - 6 வார்டுகள்
  • 13ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 14ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 15ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 16ஆவது மண்டலம் - 6 வார்டுகள்
  • 17ஆவது மண்டலம் - 15 வார்டுகள்
  • 18ஆவது மண்டலம் - 12 வார்டுகள்
  • 19ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 20ஆவது மண்டலம் - 7 வார்டுகள்
  • 21ஆவது மண்டலம் - 8 வார்டுகள்
  • 22ஆவது மண்டலம் - 11 வார்டுகள்
  • 23ஆவது மண்டலம் - 9 வார்டுகள்

இதையும் படிங்க: சென்னை மாநகராட்சியின் மண்டல எண்ணிக்கை 23ஆக உயர்த்தப்படும்!

ABOUT THE AUTHOR

...view details