தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தகுதியற்ற அடுக்குமாடி குடியிருப்புகள் சரி செய்யப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னையில் வாழ தகுதியற்ற 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் சரி செய்யப்படும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் 27,500 வீடுகள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளது - அமைச்சர் தாமோ அன்பரசன்
சென்னையில் 27,500 வீடுகள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளது - அமைச்சர் தாமோ அன்பரசன்

By

Published : May 17, 2022, 8:11 AM IST

சென்னை: கோடம்பாக்கம் பகுதிக்குட்பட்ட சுபேதார் கார்டன் பகுதியில் செயல்பட்டு வரும் பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்பை இடித்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் புது வீடுகள் கட்டப்பட உள்ளது. இங்குள்ள வீடுகளை காலி செய்ய பொதுமக்களுக்கு கருணைத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

அதை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் துறை தா.மோ.அன்பரசன் ரூ.24 ஆயிரம் கருணை தொகையினை வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஒரு மாத காலத்தில் இப்பகுதியிலுள்ள வீடுகள் ஒப்படைக்கப்பட்டால் அடுத்த 18 மாதங்களில் உறுதியாக அனைவருக்கும் புதிய வீடுகள் கொடுக்கப்படும். இதுவரை ராஜா அண்ணாமலை புரம் மக்களுக்கு மூன்று இடங்களில் வீடுகள் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள பொதுமக்கள் ஒரே இடத்தில் அனைவருக்கும் வீடுகள் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார். அதில் முழுமையாக ராஜா அண்ணாமலை புரம் பொதுமக்களுக்கு மொத்த வீடுகள் வழங்கப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் மட்டும் 27,500 அடுக்குமாடி குடியிருப்புகள் மக்கள் வாழ தகுதியற்ற வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இக்குடியிருப்புகளை கடந்த நிதி நிலை அறிக்கையில் அறிவித்தப்படி ரூ.1,200 கோடியில் 7,500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1,200 கோடியில் 7,500 வீடுகளும் ஆக மொத்தம் ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15,000 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் சுபேதார் கார்டன் பகுதியில் உள்ள மக்களே பராமரிப்பு செய்துகொள்ளும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:'வீடுகள் இடிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்' - நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு கண்டனம்

ABOUT THE AUTHOR

...view details