தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக 2016 ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து, வழக்கு தொடரப்பட்ட நிலையில், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம் 6 மாதத்திற்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே 2019 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
தனி அலுவலர்கள் பதவிக்கால நீட்டிப்பு மசோதா தாக்கல்! - உள்ளாட்சி தெர்தல்
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நீட்டிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஏற்கனவே இருந்த அலுவலர்களின் பதவிக்காலம் டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கு முன்னேற்பாடான பணிகளை பூர்த்தி செய்ய கால அவகாசம் தேவைப்படுவதால், தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான சட்டமுன்வடிவு இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த இச்சட்ட முன்வடிவு நாளை நிறைவேற்றப்பட உள்ளது.
இதையும் படிங்க: முதலமைச்சர், அமைச்சர்களுக்கு விரைவில் கரோனா தடுப்பூசி!