தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை: நிலைக்குழு உறுப்பினர்கள், தலைவருக்கான மறைமுகத் தேர்தல் - Chennai Corporation News

சென்னை மாநகராட்சி நிலைக்குழுவிற்கான உறுப்பினர்கள், நிலைக்குழுத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் இன்று(மார்ச் 31) நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

சென்னை: நிலைக்குழு உறுப்பினர்கள், தலைவருக்கான மறைமுகத் தேர்தல் இன்று
சென்னை: நிலைக்குழு உறுப்பினர்கள், தலைவருக்கான மறைமுகத் தேர்தல் இன்று

By

Published : Mar 31, 2022, 1:10 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல், மாமன்ற கூட்டரங்கில் நடைபெற்றது. சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களின் வார்டு குழுத் தலைவருக்கான தேர்தல் நேற்று(மார்ச் 30) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று முடிந்த நிலையில், பிற்பகலில் சென்னை மாநகராட்சியில் இருக்கக்கூடிய ஆறு நிலைக் குழுக்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.

கணக்கு, பொது சுகாதாரம், வரி விதிப்பு, நிதி ஆகிய நிலைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட நிலையில் நகரமைப்பு பணிகள், கல்வி ஆகிய நிலைக் குழுக்களுக்கு ஆண் உறுப்பினர்கள் எட்டுக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்ததால் போட்டியின்றித் தேர்வாகும் சூழல் இல்லாமல் இருந்தது.

இதனைத் தொடர்ந்து 1.30 மணி நேரம் அவகாசம் அளித்து, இரண்டு முறை மாமன்ற அவையை ஒத்தி வைத்தார் தேர்தல் அலுவலர் ககன் தீப் சிங் பேடி. இரண்டு முறை அவகாசம் அளித்ததைத் தொடர்ந்து துணை மேயர் அலுவலகத்தில் அமைச்சர் சேகர் பாபு தலைமையில் மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மூத்த உறுப்பினர்கள் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, மூன்று நிலைக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றித் தேர்வாவதில் இருந்த இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.

அதன் பின்னர் சென்னை மாநகராட்சியில் உள்ள ஆறு நிலைக்குழுவுக்கு 90 உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு நிலைக்குழுவிலும் எட்டு பெண்கள், ஏழு ஆண்கள் என்ற அடிப்படையில் திமுக கூட்டணி கட்சியினரின் பங்கேற்போடு நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

நேற்று(மார்ச் 30) மண்டல குழுத் தலைவர், உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், இன்று(மார்ச் 31) காலை இரண்டு நியமன உறுப்பினருக்கான மறைமுகத் தேர்தலும், பிற்பகலில் நிலைக்குழுத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலும் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அலுவலர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும்- உச்ச நீதிமன்றம்'

ABOUT THE AUTHOR

...view details