தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

கரோனா பாதிப்பு - 1,341 பேர் உயிரிழப்பு - மாநிலம் வாரியாக கரோனா பாதிப்பு

கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு காரணமாக ஆயிரத்து 341 இறப்புகள் நிகழ்ந்துள்ளது எனவும், அதிகபட்சமாக மஹாராஷ்டிரா மாநிலத்தில் 398 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

0covid deaths in india
கரோனா உயிரிழப்புகள்

By

Published : Apr 17, 2021, 5:48 PM IST

இதுதொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் கூறியிருபப்தாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு காரணமாக ஆயிரத்து 341 பேர் உயிரிழந்துள்ளனர். மஹாராஷ்ட்ரா 398, உத்தரப் பிரதேசம் 138, குஜராத் 94, கர்நாடகா 78, மத்தியப் பிரதேசம் 60, ஜார்க்கண்ட் 56, பஞ்சாப் 50, தமிழ்நாட்டில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் திரிபுரா, சிக்கிம், மிசோரம், மனிப்பூர், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 9 மாநிலங்களும், அந்தமான் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவு, லடாக் உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் நிகழ்ந்த இறப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

நாட்டில், கரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கைு 16 லட்சத்து 79 ஆயிரத்து 740 ஆக உயர்ந்துள்ளது.

இதில், மஹாராஷ்ட்ரா, சத்தீஸ்கர், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் நாட்டின் மொத்த கரோனா பாதிப்புகளில் 65.02 சதவீதமாக உள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா பாதிப்பிலிருந்து குணமைடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 71 ஆயிரத்து 220 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 354 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இதையும் படிங்க: டெல்லியில் கரோனா தொற்றை துஷ்பிரயோகம் செய்யும் கைதிகள்!

ABOUT THE AUTHOR

...view details