சென்னை:தமிழ்நாடு அரசு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி 45 நாள்களாகியும் ஆளுநர் கையெழுத்திடாதது தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் செயல் என இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு சட்டபேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு, தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையை முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முற்றுகைப் போராட்டம்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, தமிழ்நாடு அரசு சட்டபேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்காததை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைமுன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் கைது
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற 500க்கும் மேற்பட்ட மாணவர்களை காவலர்கள் தடுத்து நிறுத்தியதால் மாணவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போரட்டத்தில் ஈடுபட்டு ஆளுநருக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து போரட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை காவலர்கள் கைது செய்தனர். செய்தியாளர்களிடத்தில் பேசிய மாணவர் சங்கத்தின் இந்திய பொதுச் செயலாளர் வங்காளத்தைச் சேர்ந்த மயூஷ் பிஷ்வாஸ், "நீட் திட்டத்தை கொள்கை அடிப்படையில் எதிர்ப்பதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மாணவர் சங்கத்திடமிருந்து இந்தியாவின் மற்ற பகுதியில் உள்ளோரும் கற்றுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் மாரியப்பன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "ஒன்றிய அரசு மருத்துவ மாணவர்களின் கனவுகளை பறிக்கும் விதமாகவும், மாநில உரிமைக்கு எதிராகவும் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளது. நீட் தேர்வால் 21 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாடு அரசு நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி 45 நாள்களாகியும் ஆளுநர் கையெழுத்திடாதது தமிழ்நாடு மக்களை அவமதிக்கும் செயல்.
நீட் பயிற்சி மையங்கள் வணிக மயாக்கப்பட்டுள்ளது. பாஜகவின் அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்றவர்கள் மாணவர்களை தொடர்ந்து கொச்சைப்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு நீட் விலக்கு சட்டம் இயற்றினால் மட்டும் போதாது மத்திய அரசு நீட் விலக்கு அளிக்க கோரி வீதியில் இறங்கி போராட வேண்டும்.
மேலும், தேசிய கல்வி கொள்கையை கொள்ளைப்புறமாக கொண்டு வரும் திட்டம்தான் இல்லம் தேடி கல்வி திட்டம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இரண்டு அரசுப் பள்ளிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீர் ஆய்வு