தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் கைது - தமிழ்நாடு பிரமாணர் சங்கம்

இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ரஹீமை இந்து முன்னணி அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்தனர்.

indian national league state head tada rahim arrested
இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் கைது

By

Published : Feb 25, 2022, 7:40 AM IST

சென்னை:இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் மேகநாதன் மற்றும் தமிழ்நாடு பிரமாணர் சங்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

அதில் தனது முகநூல் பக்கத்தில் வந்த கட்டுரைப் பதிவு ஒன்றில் இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு பரவியுள்ள ஹிஜாபுக்கு எதிரான போராட்டத்தை தடுக்கும் வகையில், காஞ்சி சங்கர மடத்திலிருந்து கோட்சேவின் வாரிசுகள் அணியும் பூணூலை அறுக்கும் போராட்டத்தை தொடங்குவோம் என பேசியிருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் கைது

மேலும், இந்தப் பதிவு இஸ்லாமிய சமூக மக்களின் மனதில் வன்மத்தை விதைத்து மத ரீதியிலான கலவரத்தை உருவாக்கும் வகையிலும், நாட்டின் இறையாண்மைக்கு தீங்கிழைக்கும் வகையில் உள்நோக்கத்துடன் தடா ரஹீம் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும் தடா ரஹீம் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்யவும், அவரது இந்திய தேசிய லீக் கட்சியை தடை செய்யவும் புகாரில் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு தடா ரஹீம் மீது இரு பிரிவினரிடையே வெறுப்புணர்சியை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிங்க:2ஆவது வழக்கில் ஜெயக்குமாருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details