தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

விசாகப்பட்டினம் விரைந்த இந்திய, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் - Indian and west indies cricket team

சென்னை: இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி வீரர்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றனர்.

Indian cricket players
Indian cricket players

By

Published : Dec 16, 2019, 6:28 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடரின் முதல் போட்டி நேற்று நடைபெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியை வீழ்த்தியது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1-0 என முன்னிலை வகிக்க இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

விசாகப்பட்டினம் கிளம்பிய இந்திய, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

அதில் பங்கேற்பதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களும் கெய்ரன் பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களும் இன்று சென்னை விமான நிலையத்திலிருந்து தனி விமான மூலமாக விசாகப்பட்டினம் புறப்பட்டுச் சென்றனர்.

ABOUT THE AUTHOR

...view details