தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சுதந்திர தினம் 2020: தமிழ்நாடு அரசு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்

சென்னை: சுதந்திர தினம் 2020 முன்னிட்டு தமிழ்நாடு அரசின் விருதுகளை பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By

Published : Aug 15, 2020, 11:01 AM IST

நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழாவையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடியோற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

அதையடுத்து தமிழ்நாடு அரசின் திட்டங்கள், அறிவிப்புகள் குறித்து உரை நிகழ்த்தினார். அதைத்தொடர்ந்து கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் 27 பேருக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அதில்

டாக்டர் அ.ப.ஜெ அப்துல்கலாம் விருது:

ச.செல்வகுமார் நிறுவனர் ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை.

துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது:

செந்தமிழ் செல்வி, முத்தம்மாள், ஆனந்த வள்ளி பெரம்பலூர் மாவட்டம்

கோவிட் 19-க்கான முதலமைச்சர் சிறப்பு விருது:

மருத்துவர் சௌமியா சுவாமிநாதன், முதன்மை ஆராய்ச்சியாளர் உலக சுகாதார நிறுவனம் ஜெனீவா

முதலமைச்சரின் நல் ஆளுமை விருது:

  1. கருவூல கணக்கு துறை, மாநிலத்தின் நிதி கருவூலம் மனிதவள மேலாண்மை மற்றும் ஒய்வூதிய மேலாண்மை ஆகிய பணிகளை கணினிமயமாக்கும் நோக்கோடு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை கருத்துருவாக்கியமைக்காக.

2. பெருநகர சென்னை மாநகராட்சி, காய்ச்சல் சிகிச்சை முகாம்களை நடத்தி கோவிட் 19 நோய்த் தொற்றின் சங்கிலியை உடைத்ததற்காக

3.வேளாண்மை தோட்டகலை மலை பயிர்கள் மற்றும் வேளான் பொறியியல் துறைகள், சொட்டு நீர் பாசனம் மூலம் நீர் ஆதாரத்தை பேணுவதற்காக புதுமையான யுக்திகளை கையாண்டதன் மூலம் நுண்ணீர் பாசனத்தில் நாட்டில் முதலிடத்தை தமிழ்நாடு பெறுவதற்கு உதவியதற்காக வழங்கினார்.

இதையும் படிங்க:விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 17ஆம் தேதி முதல் உடனுக்குடன் இ-பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details