தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா! - சென்னை

சென்னை: சென்னை மாநகரில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிகையும் உயர்ந்துள்ளன.

corporation
corporation

By

Published : Aug 29, 2020, 11:04 AM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவல் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. நேற்று வரை (ஆகஸ்ட் 28) சென்னையின் மொத்த தொற்று பாதிப்பு 1,30,564ஆக உள்ளது. கடந்த சில வாரங்களாக சென்னையில் குறைந்து காணப்பட்ட கரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மாநகரில் 24ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்டப் பகுதிகளின் எண்ணிக்கை, மீண்டும் உயர்ந்து வருகிறது. அதன்படி, சென்னை மாநகராட்சியின்,

  • 8ஆவது மண்டலத்தில் (அண்ணா நகர்) 12 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்,
  • 10ஆவது மண்டலத்தில் (கோடம்பாக்கம்) 8 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்,
  • 11ஆவது மண்டலத்தில் (வளசரவாக்கம்) 10 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்,
  • 12ஆவது மண்டலத்தில் (ஆலந்தூர்) 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதி,
  • 13ஆவது மண்டலத்தில் (அடையார்) 10 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்,
  • 14ஆவது மண்டலத்தில் (பெருங்குடி) 1 கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மற்றும்
  • 15ஆவது மண்டலத்தில் (சோழிங்கநல்லூர்) 3 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்

என அதிகரித்து வருகிறது. மேற்படி பகுதிகளில் தொற்றின் தாக்கம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கரோனா நிலவரம் இன்று: பாதிப்பு - 5,996; உயிரிழப்பு - 102

ABOUT THE AUTHOR

...view details