தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாணவர்கள் மத்தியில் அதிகரித்த புகையிலை பயன்பாடு! - புகையிலை பயன்பாடு

சென்னை: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மத்தியில் புகையிலை பயன்பாடு அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

tobacco
tobacco

By

Published : Feb 24, 2021, 7:19 PM IST

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே புகையிலை பயன்பாடு அதிகரித்துள்ளதாக, புகையிலை கட்டுப்பாட்டிற்கான ஆராய்ச்சி நடவடிக்கை (REACT) மற்றும் புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பு ஆகியவை எடுத்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, புகையிலை கட்டுப்பாட்டிற்கான தமிழக மக்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிறில் அலெக்சாண்டர் நம்மிடம் கூறும்போது, “தமிழ்நாட்டில் புகையிலை தயாரிப்பு தொழிற்சாலைகள் இல்லையென்றாலும், சட்டத்திற்கு புறம்பாக விற்பனை அதிகமுள்ளது. பள்ளி கல்லூரி மாணவர்களின் கவனத்தை ஈர்த்து, புகையிலையை பயன்படுத்த வைக்கின்றனர்.

பலவீனமான வரிவிதிப்பு கொள்கைகள் மற்றும் புகையிலை வர்த்தகம் மீதான கட்டுப்பாடுகள் காரணமாக, இந்தியாவில் நுகரப்படும் புகையிலை பொருட்கள் மிகவும் மலிவு. இந்தியாவின் புகையிலை தொழில் அதன் வணிகம் முறையானது என்று நடிகர்களால் விளம்பரப்படுத்தப்படுகிறது. முக்கிய புகையிலை மற்றும் பான்மசாலா நிறுவனங்கள், இந்திய அரசாங்கத்தை மோசடி செய்வதற்காக வரிகளை தவிர்த்து வருகின்றன அல்லது வருவாயை தவறாக பதிவு செய்கின்றன.

மாணவர்கள் மத்தியில் அதிகரித்த புகையிலை பயன்பாடு!

கரோனா பெருந்தொற்று காலங்களில், புகையிலை பழக்கம் மாணவர்கள் மத்தியில் குறைந்திருந்தது. ஆனால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கியவுடன் இந்த தீய பழக்கம் அதிகரித்துள்ளது. நுகர்வோர் புகையிலை மீதான வரிகளை தவிர்ப்பதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்துகிறார்கள் மற்றும் சப்ளையர்கள் எளிதில் எல்லை நுழைவு, அதிக லாப வரம்புகள் மற்றும் பிடிபட்டால் பலவீனமான விளைவுகளை பயன்படுத்த விரும்புகிறார்கள்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மருத்துவர் கொடுத்த தவறான மருந்தால் வட மாநில இளைஞருக்கு உடல் உபாதை

ABOUT THE AUTHOR

...view details