சென்னை:ஆவின் நிர்வாகம் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தியுள்ளது. அதன்படி, 100 கிராம் ஆவின் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12ஆக உயர்ந்துள்ளது. 200 கிராம் ஆவின் தயிர் விலை 25-லிருந்து 28 ரூபாயாக அதிகரித்துள்ளது. அரை லிட்டர் தயிர் பாக்கெட்டின் விலை 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஒரு லிட்டர் தயிருக்கு 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளதைத்தொடர்ந்து, பால் முகவர்கள் சங்கம் இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளது. இதேபோல, ஒரு லிட்டர் நெய்க்கு 50 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொருளாதார நெருக்கடி மிகுந்த தருணத்தில், ஏழை மக்களைப் பாதிக்கும் வகையிலான இந்த விலை உயர்வு நியாயமற்றது எனப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஆவின் தயிர் மற்றும் நெய் விலை உயர்வு; பால் முகவர்கள் சங்கம் கண்டனம் கடந்த மார்ச் மாதத்தில் ஆவின் நெய், வெண்ணெய், தயிர், ஐஸ்கிரீம் ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில், 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் மீண்டும் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:சிறுமியிடம் கருமுட்டை எடுத்த விவகாரம்; மருத்துவமனை ஸ்கேன் சென்டர் சீலை அகற்ற நீதிமன்றம் உத்தரவு!