தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தமிழ்நாட்டிலிருந்து நெல்கொள்முதல் அதிகரிப்பு - வேளாண் அமைச்சகம் தகவல்! - நெல்கொள்முதல் அதிகரிப்பு

நடப்பு 2020-21 காரீப் சந்தைக் காலத்தில் விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசு கொள்முதல் செய்வது அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Increase in paddy procurement
Increase in paddy procurement

By

Published : Nov 28, 2020, 7:37 AM IST

சென்னை: இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள வேளாண் அமைச்சகம் கூறியிருப்பதாவது:-

பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, உத்தரகாண்ட், தெலங்கானா, சண்டிகர், ஜம்மு காஷ்மீர், குஜராத், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் ஆகிய மாநிலங்களில் நெல் கொள்முதல் செய்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இங்கு நவம்பர் 26 வரை 310.61 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கடந்தாண்டில் இதே காலத்தில் 261.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டை விட இந்தாண்டு நெல் கொள்முதல் 18.78 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தாண்டில் இது வரையிலான மொத்த கொள்முதலில், பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 202.65 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு காரீப் சந்தை காலத்தில் 28.45 லட்சம் விவசாயிகள் ஏற்கனவே பயனடைந்துள்ளனர். இவர்கள் தங்களது விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.58,644.65 கோடி பெற்றுள்ளனர்.

மாநிலங்கள் வேண்டுகோள்படி, தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ஒடிசா மற்றும் ராஜஸ்தான், மற்றும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்து 45.24 லட்சம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆதார விலையில் கொள்முதல் செய்யவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்து 1.23 லட்சம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சந்தை விலை, குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைந்தால், மற்ற மாநிலங்களில் பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் செய்ய, வேண்டுகோள் அடிப்படையில் ஒப்புதல் வழங்கப்படும்.

இதையும் படிங்க:டெல்லியில் போராட விவசாயிகளுக்கு அனுமதி

ABOUT THE AUTHOR

...view details