தமிழ்நாடு

tamil nadu

உள்நாட்டு விமான சேவைகள் அதிகரிப்பு!

By

Published : Sep 14, 2020, 4:44 PM IST

சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் இயக்கப்படும், விமான சேவைகள் மேலும் அதிகரிக்கப்பட்டு, இன்று 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன.

flight
flight

கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மாா்ச் 24ஆம் தேதியிலிருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன. 2 மாதங்கள் இடைவெளிக்குப் பின்பு கடந்த மே 25 ஆம் தேதியிலிருந்து மிகவும் குறைந்த அளவு உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கின.

ஆனாலும் சென்னையில் அதிகரித்துவந்த கரோனா தாக்கம், இ-பாஸ் கெடுபிடிகள் காரணமாக பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தன. அதைப்போல் விமான சேவைகளும் குறைவாக இருந்தன.

இந்நிலையில் ஊரடங்கில் தளா்வுகள், மாநிலங்களுக்குள் இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம் என்ற அரசின் அறிவிப்பு, மாநிலங்கள் இடையேயும் தாராள இ-பாஸ் போன்றவைகளால், சென்னை நகரில் கரோனா தாக்கம் ஓரளவு குறையவும் செய்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கையும், விமானங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கின. கடந்த வாரம் 100 விமானங்களாக அதிகரித்தன. இந்நிலையில் இன்று மேலும் அதிகரித்து 126 விமானங்களாகியுள்ளன.

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து புறப்படும் 63 விமானங்களும், சென்னைக்கு வரும் 63 விமானங்களும் என 126 விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதில் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களில் சுமாா் 5 ஆயிரம் பேரும், சென்னைக்கு வரும் விமானங்களில் 7,500 பேரும் என மொத்தம் 12,500 போ் பயணிக்கின்றனா்.

கொல்கத்தா, டெல்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, புவனேஸ்வா், பாட்னா போன்ற விமான நிலையங்களில் அதிகமான பயணிகள் பயணிக்கின்றனா்.

ABOUT THE AUTHOR

...view details