சென்னை: பிரபல ஜவுளி நிறுவனமான சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் 1969ஆம் ஆண்டு செல்வரத்தினம் என்பவரால் தொடங்கப்பட்டு சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பல கிளைகளைக் கொண்டு இயங்கி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் சூப்பர் சரவணா ஸ்டோருக்கு சொந்தமான 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 8.30 மணியளவில் வருமான வரித்துறையினர் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனை நடைபெறும் இடங்கள்
சூப்பர் சரவணா ஸ்டோர்ஸுக்கு சொந்தமான தி.நகர் ரங்கநாதன் தெரு சரவணா செல்வரத்தினம் துணிக்கடை, தி.நகர் ரங்கநாதன் தெரு சூப்பர் சரவணா ஸ்டோர் துணிக்கடை, தி நகர் ரங்கநாதன் தெரு சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, தி.நகர் ரங்கநாதன் தெரு சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை, தி.நகர் வடக்கு உஸ்மான் சாலை சரவணா செல்வரத்தினம் துணிக்கடை, தி நகர் லஷ்மண் தெரு சூப்பர் சரவணா ஸ்டோர் நிறுவனர் ராஜரத்தினம் வீடு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் பர்னிச்சர் கடை, புரசைவாக்கம் நெடுஞ்சாலை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் நகைக்கடை, போரூர் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை, குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் துணிக்கடை, மதுரை அழகப்பன் நகரில் உள்ள சரவணா செல்வரத்தினம் துணிக்கடை ஆகிய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.