சென்னை யானைக்கவுனி என்.எஸ்.சி. போஸ் சாலையில் அமைந்துள்ள டைமன் காம்ப்ளக்ஸின் முதல் தளத்தில் ஸ்ரீ கே.ஜே. ஜுவல்லரி நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு வருமானவரித் துறையினர் நேற்று (மார்ச் 25) இரவு 8 மணிமுதல் சோதனை மேற்கொண்டனர்.
தொடர் வரி ஏய்ப்புச் செய்ததாக வந்த புகாரையடுத்து இந்த நிறுவனத்தில் சோதனை நடத்தப்படுவதாக, வருமானவரித் துறை அலுவலர்கள் தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்.