தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

Income tax raid: ஆர்டிஓ இல்லத்தில் வருமான வரித் துறை சோதனை - ஓய்வு பெற்ற ஆர்டிஓ இல்லத்தில் வருமானத் துறையினர் சோதனை

சென்னையில் ஓய்வுபெற்ற ஆர்டிஓ இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் சில இடங்களிலும் சோதனை நடைபெற்றுவருகிறது.

வருமான வரித்துறை சோதனை
வருமான வரித்துறை சோதனை

By

Published : Dec 22, 2021, 1:40 PM IST

சென்னை: தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி மூன்றாவது தெருவில் வசித்துவரும் ஓய்வுபெற்ற ஆர்டிஓ (Regional Transport Officer) தரணி இல்லத்தில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கோபாலபுரம், ஓ.எம்.ஆர். உள்ளிட்ட நான்கு இடங்களில் இன்று (டிசம்பர் 22) காலையிலிருந்து வருமான வரித் துறை சோதனை நடைபெற்றுவருகிறது.

குறிப்பாக, இந்தச் சோதனையானது வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வருமானவரித் துறை அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

வருமான வரித் துறை சோதனை

முக்கிய ஆவணங்கள்

மேலும் சோதனை நடைபெற்ற இடங்களில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அந்த ஆவணங்களின் அடிப்படையில் இரவிலிருந்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் வருமான வரித் துறை அலுவலர்கள் கூறியுள்ளனர்.

பணியாற்றிய காலத்தில் முறைகேடாக பல ஆவணங்களில் கையொப்பமிட்டு பணம் பெற்றதாகவும், அதன் காரணமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் வருமான வரித் துறை தரப்பிலிருந்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வாத்தி ரெய்டு... மாஸ்டர் பட தயாரிப்பாளர் வீட்டில் தொடரும் சோதனை

ABOUT THE AUTHOR

...view details