புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு அலுவலங்களில் உள்ள 6 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடெங்கும் மத்திய அரசைக் கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டு வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருனானவரித்துறை அலுவலர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊழியர்கள் பணிக்கு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், வருமான வரித்துறை அலுவலகத்தின் தினசரி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வேலை நிறுத்தத்தால் வெறிச்சோடிய வருமான வரித்துறை அலுவலகம் - மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தம்
சென்னை: மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் நடைபெற்று வரும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் பங்கேற்றுள்ளதால், சென்னை வருமான வரித்துறை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
இது குறித்து வருமான வரித்துறை ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாட்டின் பொதுச்செயலாளர் வெங்கேடசன் கூறுகையில், "நாடு முழுவதும் நடக்கும் வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர்கள் 35 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். வருமான வரித்துறை சார்பில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 6 லட்சம் காலியிடங்களை நிரப்ப வேண்டும், கருணை அடிப்படையில் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும் பணி வரன்முறையில் உள்ள கடுமையான விதிகளை தளர்த்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்", என்றார்.
இதையும் படிங்க: புதுச்சேரியில் வேலைநிறுத்தம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு