1. கிராமப்புற சிறுபான்மையின மாணவியர் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில 3 முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு 2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் செலவில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
2. கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்குவது இத்துறை மூலம் செயல்படுத்தப்படும்.
3. சென்னையில் உள்ள கிறிஸ்த்துவர்களுக்கான அடக்கஸ்தலங்கள் அமைக்க பின்பற்றப்படும் நிபந்தனைகள் தளர்வு செய்யப்படும்.
4. மாநில அளவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதி சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் செலவில் கொண்டாடப்படும்.
5.உலமா ஓய்வூதியதாரர் இறந்த பிறகு அவரின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். என சிறுபான்மையினர் நலன் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:சட்டப்பேரவை நேரலை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்