தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'ஐபோன் இல்ல... ஆண்ட்ராய்டு போன் மாதிரி முதலமைச்சர்' - அதிமுக எம்எல்ஏ குபீர் - edappadi palanisamy

சென்னை: "முதலமைச்சர் பழனிசாமி பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல" என்று, ராதாபுரம் எம்எல்ஏ இன்பதுரை தெரிவித்தார்.

இன்பதுரை

By

Published : Jul 11, 2019, 12:01 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசிவருகின்றனர்.

அந்தவகையில், இன்று ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை சட்டப்பேரவையில் பேசுகையில், ”பணக்காரர்கள் கையில் தவழும் ஐபோன் போன்றவர் அல்ல முதலமைச்சர். எளியோரின் கைகளில் தவழும் ஆண்ட்ராய்டு போனை போன்றவர் முதலமைச்சர் பழனிசாமி. எளிதில் அணுகக் கூடியவர்.

லாங் ஸ்டாண்ட் லித்தியம் பேட்டரி போன்று நிலைத்து நிற்பவர் அவர். மதர்போர்டு சிறப்பாக இருப்பதால் சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details