தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடுரோட்டில் கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து! - perungalathur subway

சென்னனை: பெருங்களத்தூர் அருகே சென்ட் பாட்டில்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கண்டெய்னர் லாரி கவிழ்து விபத்து!

By

Published : Jun 7, 2019, 10:18 PM IST

தாம்பரம் சானிடோரியம் மெப்ஸ் வணிக வளாகத்தில் தனியார் சென்ட் பாட்டில் தயாரிக்கும் நிறுவனம் செயல்படுகிறது. இங்கிருந்து 2010 சென்ட் பாட்டில்களுடன் கன்டெய்னர் லாரி ஒன்று சென்னை துறைமுகம் நோக்கி நேற்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, லாரி இரும்புலியூர் மேம்பாலம் கீழ் சர்வீஸ் சாலை வளைவில் திரும்பும்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்ததால், லாரி நிலை தடுமாறி பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்நிலையில் இன்று காலை வரை ஆகியும் சம்பவ இடத்தில் இருந்த லாரியை போக்குவரத்து காவலர்கள் அப்புறப்படுத்தாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். பின்னர் பல மணிநேரம் கழித்து போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் வந்து லாரியை மீட்டு அப்புறப்படுத்தினர்.

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

ABOUT THE AUTHOR

...view details