சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 18 வயது முதல் 44 வயதை சேர்ந்தவர்கள் மொத்தம் 35 லட்சத்து 16 ஆயிரத்து 474 பேர் உள்ளனர். அதில் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் 5.16 % பேருக்கு மட்டுமே செலுத்தப்பட்ட கரோனா தடுப்பூசி - Corona vaccines
சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18 வயது முதல் 45 வயதுக்குள்பட்டோருக்கான முன்னுரிமை அடிப்படையில் 5.16 விழுக்காடு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் தேதி நிலவரப்படி, 1 லட்சத்து 86 ஆயிரத்து 553 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் மொத்த எண்ணிக்கையில் 5.16 % பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 21,585 நபர்களுக்கும், குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 7,267 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாகவே குறைந்தளவு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.