இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கரோனா தொற்று காலத்திலும் கரோனா தொற்று அல்லாத பிற நோயாளிகளுக்கும் தங்கு தடையின்றி சிறப்பான முறையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுவருகின்றன. மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், மார்ச் 2020 முதல் இதுவரை 1,31,352 பேர், புற்றுநோய் சார்ந்த மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களில் 48,647 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட 250 புற்றுநோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.