முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு ஸ்டாலின் ஆஜராவாரா?
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு தலைமைச் செயலர் ஆலோசனை
தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் கரோனா தொற்று கட்டுப்பாடுகள் குறித்து உயர் அலுவலர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் மழை பெய்யும்
எட்டு மாவட்டங்களில் கனமழை தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, திருப்பூர், ஈரோடு ஆகிய எட்டு மாவட்டங்களில் இரண்டு நாள்கள் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் இன்றைய ஆட்டம்
ஐபிஎல் தொடரின் எட்டாவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது.
ராஜஸ்தானில் இன்றுமுதல் இரவு நேர பொதுமுடக்கம்
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்துவருவதால் ராஜஸ்தான் மாநிலத்தில் இன்றுமுதல் ஏப்ரல் 19ஆம் தேதிவரை இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது.