தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவப் படிப்பு.. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..

மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் குறைபாட்டை பிரதிபலிக்கும் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு செயலாளர் முத்துசெல்வன் தெரிவித்துள்ளார்.

Physically
Physically

By

Published : Aug 28, 2022, 9:25 PM IST

சென்னை: தமிழ்நாடு அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள இடங்கள், சுயநிதி கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் நீட் முதுநிலை படிப்பு, டிப்ளமோ, முதுகலை அறுவை சிகிச்சை படிப்புகளில் 2022-23ஆம் கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

இதில், அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 5 சதவீதம் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆன்லைனில் விண்ணப்பத்துடன் தங்கள் குறைபாட்டை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்திய முழு புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், இந்த சிறப்பு ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்களின் சான்றிதழ் மருத்துவக்கல்வி இயக்குனரால் நியமிக்கப்படும் சிறப்பு மருத்துவக் குழுவினரால் கலந்தாய்வு நடைபெறும் நேரத்தில் உறுதி செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கள் குறைபாட்டை பிரதிபலிக்கும் புகைப்படத்தை பதவிவேற்றம் செய்ய சொல்லும் விண்ணப்ப பிரிவு நீக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் மூன்று மாதங்களுக்குள் எடுத்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், மாற்றுத்திறனாளிக்கான படிவத்தை பூர்த்திச் செய்து இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்ட மூன்று சிறார்கள் மீது வழக்குப்பதிவு

ABOUT THE AUTHOR

...view details